இறுதிகட்டத்தில் இது என்ன மாயம்!

Bookmark and Share

இறுதிகட்டத்தில் இது என்ன மாயம்!

சைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் படம் இது என்ன மாயம். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது எடிட்டிங், டப்பிங், மிக்சிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கையில் திசை மாறிப்போன முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்து கொண்டு ஒரே இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டானால் அது எப்படி இருக்கும் என்கிற கதை.

கேரளாவில் பசுமை நிறைந்த பகுதிகளில் காதலர்களின் முந்தைய காதலையும், சென்னையில் இன்றைய வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் விஜய். ஆக்ஷன் பக்கம் திரும்பி சென்று கொண்டிருக்கும் விக்ரம் பிரபு நடித்திருக்கும் லவ் செண்டிமென்ட் படம்.

தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேசின் முதல் படம். இருவருக்கும் லவ் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

விஜய்யின் குருவான ப்ரியதர்ஷனும், மனைவி அமலாபாலும் சேர்ந்து தேர்வு செய்தவர்தான் கீர்த்தி சுரேஷ். சைவம் விருதுகளால் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் விஜய் என்ன மாயம் செய்திருக்கிறார் என்பது படம் வெளிவந்ததும் தெரிந்து விடும்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions