இது என்ன மாயம் படத்துக்கு நாள் குறித்தது எப்படி?

Bookmark and Share

இது என்ன மாயம் படத்துக்கு நாள் குறித்தது எப்படி?

நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார், லிஸ்டின் இணைந்து மேஜிக் ப்ரேம்ஸ் பேனரில் ஒரே நேரத்தில் மாரி, இது என்ன மாயம், பாம்புசட்டை ஆகிய மூன்று படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர்.

இவற்றில் தனுஷ் நடித்த மாரி படம் சில தினங்களுக்கு முன் வெளியாகிவிட்டது. விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம் இம்மாதம் 31 அன்று வெளியாக உள்ளது.

பாபிசிம்ஹா நடித்து வரும் பாம்பு சட்டை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தொடங்கியதால் திட்டமிட்டபடி மூன்று படங்களையும் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல மாரி, இது என்ன மாயம் ஆகிய படங்கள் முடிவடைந்த நிலையிலும் அவற்றை ரிலீஸ் பண்ண முடியாத அளவுக்கு பணச்சிக்கல் இருந்தது. மாரி கமர்ஷியலாக ஹிட்டானதில் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அந்த உற்சாகத்திலும் தைரியத்திலும் கிடப்பில் கிடந்த இது என்ன மாயம் படத்தின் ரிலீஸ் தேதியை குறித்துள்ளனர்.


Post your comment





Related News
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions