இது என்ன மாயம் படத்தில் ஜோடியான பிரபு மகன், மேனகா மகள்: பழைய கதாநாயகிகள் வாழ்த்து

Bookmark and Share

இது என்ன மாயம் படத்தில் ஜோடியான பிரபு மகன், மேனகா மகள்: பழைய கதாநாயகிகள் வாழ்த்து

விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபுவும், பழைய கதாநாயகி மேனகா மகள் கீர்த்தி சுரேஷூம் ஜோடியாக நடிக்கின்றனர். மேனகா ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’, ‘நெற்றிக்கண்’, ‘சாவித்திரி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மலையாள படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இது என்ன மாயம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இதில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள். முன்னாள் கதாநாயகிகள் ராதிகா, மீனா, சுகாசினி உள்ளிட்டடோரும் வாழ்த்தினர்.

சரத்குமார் பேசும்போது ‘‘பிரபு மகன் விக்ரம் பிரபுவும் மேனகா கீர்த்தியும் ஜோடியாக நடிக்கும் இப்படம் நல்ல காதல் கதை. திறமையான குழுவினர் இருக்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’’ என்றார்.

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது ‘‘நான் படிக்கிற காலத்தில் சிவாஜி ரசிகன். பிறகு பிரபு ரசிகனாக இருந்தேன். இப்போது விக்ரம் பிரபு நாயகனாகியுள்ளார். முதல் படத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறார். எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.

மேனகா பேசும்போது ‘‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’’ படத்தில் கதாநாயகியாக நான் அறிமுகமானேன். தியேட்டரில் வைத்திருந்த எனது கட்அவுட்டை பார்த்து பெற்றோர் சந்தோஷப்பட்டனர். அதே சந்தோஷம் என்மகள் தமிழ்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.

டைரக்டர்கள் பிரியதர்ஷன், கவுதம்மேனன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் நாசர், ராம்குமார், நவ்தீப், நடிகை அமலாபால், பாடல் ஆசிரியர், நா.முத்துகுமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

‘இது என்ன மாயம்’ படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions