வாலு போல் நீளுமா ஆளு?

Bookmark and Share

வாலு போல் நீளுமா ஆளு?

நடப்பதை வைத்து பார்த்தால் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படமும் வாலு போல நீண்டு கொண்டே போகும் போலத்தான் தெரிகிறது. 

இரண்டு வருடங்களுக்கு முன் இது நம்ம ஆளு படம் ஆரம்பமான போது சிம்புவிடம் போய் சிக்குகிறாரே பாண்டிராஜ் என நினைத்தவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் மாற்றிக் காட்டுகிறேன் என சவால் விடாத குறையாக சிம்புவை வைத்து படம் இயக்க ஆரம்பித்தவர்தான் பாண்டிராஜ். 

ஒரு கட்டத்தில்தான் சிம்புவை மாற்றவே முடியாது என அவர் உணர்ந்து கொண்ட அவர் எப்படியோ ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டார் பாண்டிராஜ். ஆனால் படம் எப்போது வெளிவரும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. 

நயன்தாரா படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தே ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வரை புகாருடன் சென்று விட்டார் படத்தின் தயாரிப்பாளரான டி.ஆர். இதற்கும் சிம்புவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார்.

ஆனால், படத்தின் இத்தனை தாமதத்திற்கும் காரணம் சிம்புதான் என்பது அவருக்குத் தெரியாதா என்ன ?. இருந்தாலும் நயன்தாரா நடித்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அந்தப் பிரச்சனை முடிந்து, படப்பிடிப்பு நடத்தி, படத்தை வெளியிட்டு முடிப்பதற்குள் ஆளு வாலுவாக மாறிவிடும் போல் இருக்கிறது.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions