காதலர் தினத்தன்று 'இது நம்ம ஆளு' ப்ளூப்பர்ஸ்...

Bookmark and Share

காதலர் தினத்தன்று 'இது நம்ம ஆளு'  ப்ளூப்பர்ஸ்...

'ப்ளூப்பர்ஸ்' என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறு தகவல். டிவிக்களில்தான் இப்படி ஒரு விஷயத்தை ஆரம்பித்து ரசிக்க வைத்தார்கள். அதாவது, படப்பிடிப்பின் போது நாம் செய்யும் தவறுகளைத் தொகுத்து  அதையே ஒரு நிகழ்ச்சியாக வடிவமைத்து வீடியோவாகவும், நிகழ்ச்சியாகவும் வெளியிட்டு பலத்த வரவேற்பைப் பெற்றார்கள்.

ஜாக்கிசான் படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். படம் முடிந்ததும் முடிவில் டைட்டில் போடும் போது படத்தில் சண்டைக் காட்சிகளின் போதும், படப்பிடிப்பின் போதும் நடந்த சில சுவாரசியமான விஷயங்களைத் தொகுத்துப் போடுவார்.

அது அப்படியே நம் தொலைக்காட்சிகளுக்கும் தாவியது, பின்னர் சினிமாக்காரர்களும் காப்பியடிக்க ஆரம்பித்தார்கள். சில மாதங்களுக்கு முன்  வெளியான 'நண்பேன்டா' படத்தின் டீசரை வெறும் 'ப்ளூப்பர்ஸ்' டீசராகத்தான் வெளியிட்டிருந்தார்கள்.

இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் ப்ளூப்பர்ஸ்-ஐ காதலர் தினத்தன்று வெளியிட உள்ளார்களாம். படத்தின் தலைப்பே இது காதல் கதைதான் என்று சொல்லும்.

அதிலும் முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் காதலர் தினத்தன்று வெளியிடுவதும் மிகவும் பொருத்தமாகவே இருக்கும் என்று நினைத்துள்ளார்கள் போலிருக்கிறது. வர வர படத்தோட 'மேக்கிங்'-ஐ விட 'மார்க்கெட்டிங்' டெக்னிக்தான் முக்கியமாகி வருகிறது. 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions