இது நம்ம ஆளு , ஹைக்கூ.. முதலில் வரும் படம் எது?

Bookmark and Share

இது நம்ம ஆளு , ஹைக்கூ.. முதலில் வரும் படம் எது?

சிம்பு நடித்த படங்கள் உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகாது என்பது இதோ மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது. சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு.  

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இது நம்ம ஆளு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி படம் முடியவில்லை. இந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கப்போனார் சிம்பு.

இது நம்ம ஆளு படம் தாமதம் ஆனதால், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்காக ஹைக்கூ படத்தைத் தொடங்கினார் பாண்டிராஜ். இது நம்ம ஆளு பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், ஹைக்கூ பணியில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

இது நம்ம ஆளு , ஹைக்கூ ஆகிய படங்களில், ஹைக்கூ படமே முதலில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் 3 பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டன.  

இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது. இதனால், ஹைக்கூ பணிகள் முடிவுற்று விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார் பாண்டிராஜ்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions