இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு

Bookmark and Share

இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு

சிம்பு தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படத்தின் டீசர் வெளியானது. வெளிவந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்து முத்திரைப் பதித்தது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக படத்தின் பிளூப்பர்ஸ் காட்சிகளை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. ‘இது நம்ம ஆளு’ காதலை மையமாகக் கொண்ட படம்.

ஆதலால் காதலர் தின பரிசாக இந்த பிளூப்பர்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிறுசிறு தவறுகள், அதில் நாங்கள் மகிழ்ந்த விஷயங்கள் உள்ளடங்கியிருக்கும். அதேபோல் நம் உறவுகளின் மத்தியில் நடக்கும் சிறுசிறு தவறுகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர வேண்டும்” என்றார். 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions