இது நம்ம ஆளு படத்துக்கு என்ன சிக்கல்?

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்துக்கு என்ன சிக்கல்?

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன் சிம்பு நயன்தாரா வல்லவன் படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோரும் நடிக்கிறார்கள். இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் சிம்புவின் தம்பி குறளரசன்.

சிம்பு - நயன்தாரா மறுபடியும் இணைந்து நடிப்பதால் இது நம்ம ஆளு படத்தை தொடங்கியபோது மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது. பிறகு படத்தை கிடப்பில் போட்டனர். எனவே இது நம்ம ஆளு என்ற படத்தையே மக்கள் மறந்திருந்தநிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியானது.

25 நாட்களில் இந்த டீஸரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சிம்பு நடித்த படங்களிலேயே அதிகம் பேர் பார்த்த டீஸர் இதுதான். சிம்புவின் கேரியரில் இது சாதனைதான்.

ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்களுக்குத்தான் அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அந்த லிஸ்டில் இப்போது சிம்புவும் சேர்ந்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்திலிருக்கிறார்கள்.

சிம்பு நடித்த வாலு மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி வாலு ரிலீஸ் ஆனால் ஏப்ரல் இறுதியில் இது நம்ம ஆளு படம் ரிலீஸாகும். ஒருவேளை வாலு ரிலீஸ் ஆகாமல் போனால் இது நம்ம ஆளு படத்துக்கும் சிக்கல்தான்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions