பீப் பாடலால் இது நம்ம ஆளு படத்துக்கு சிக்கல்?

Bookmark and Share

பீப் பாடலால் இது நம்ம ஆளு படத்துக்கு சிக்கல்?

பீப் பாடல் விவகாரத்தில் பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அவர் மட்டுமின்றி அவர் குடும்பமும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிகிறது.

அவருடைய தனிப்பட்ட சிக்கல் அவர் படத்துக்கும் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இதுநம்மஆளு படம் பிப்ரவரியில் வெளியாவதாக இருந்தது.

அந்தப்படத்தின் வெளியிடும் உரிமையை தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்றுக்குப் பலமுறை பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதனால் அந்தப்படத்தை அவர்கள்தான் வெளியிடவிருக்கிறார்கள் என்று செய்திகளும் வந்துவிட்டன. இந்நிலையில் இந்தச்சிக்கல் வந்துவிட்டதால் தேனாண்டாள்நிறுவனத்தினர் இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இருந்து பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

ஏற்கெனவே தேனாண்டாள் உட்பட வேறு சில நிறுவனங்களிலும் சிம்பு தரப்பிலிருந்து பேசிவருவதாகச் சொல்லப்பட்டது. இப்போது தேனாண்டாள்நிறுவனம் இல்லை என்று முடிவாகிவிட்டதால் வேறு நிறுவனங்களிடம் பேசுகிறார்களாம். 

எப்படியும் பிப்ரவரியில் படத்தை வெளியிட்டுவிடுவது என்று உறுதியாக இருப்பதாகவும் யாரும் வெளியிட முன்வராவிட்டால் சொந்தமாகவே படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions