பாதி படத்தை முழுப்படமாக்கிய சிம்பு மற்றும் டி.ஆர்!

Bookmark and Share

பாதி படத்தை முழுப்படமாக்கிய சிம்பு மற்றும் டி.ஆர்!

சிம்பு மற்றும் நயன்தாரா  9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். 

இவ நம்ம ஆளு என்று முதலில் டைட்டில் வைக்கப்பட்டது.சிம்பு தன்னை சொல்வதுபோல் உள்ளதால் அந்த டைட்டிலுக்கு நயன்தாரா எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்தனர். 

இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சிம்பு - நயன்தாரா இடையிலும், சிம்பு - பாண்டிராஜ் இடையிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு படம் முடியாமல் போனது.

இப்படத்தின் சில காட்சிகளும், நயன்தாரா நடிக்க வேண்டிய ஒரு பாடலும் இன்னும் படமாக்கப்படாத நிலையில் இது நம்ம ஆளு படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட சிம்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இது நம்ம ஆளு படம் முக்கால்வாசிதான் முடிந்திருக்கிறது. பிறகு எப்படி படத்தை வெளியிட முடியும்? பாண்டிராஜ் இயக்கத்தில் உருவானாலும் சிம்புவும் அவரது அப்பாவும் எடிட் செய்து முக்கால்வாசி படத்தை முழுப்படமாக்கிவிட்டனர்.

அதை வேறு வழியில்லாமல் பாண்டிராஜ் ஒப்புக்கொண்டதால் படம் திட்டமிட்டபடி வெளிவரும் என்கிறார்கள். 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions