பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!

Bookmark and Share

பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!

நம் அனைவருக்கும் பரிட்சையமான ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் "இது வேதாளம் சொல்லும் கதை" அஸ்வின் ககாமனு (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ ) குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர் )மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்துள்ளனர். மேலும் பிரபல குத்துசண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான கிரஃ  புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை  காட்சிகளையும்  வடிவமைத்துள்ளார்.

படத்தில் பிரபல நடிகர் ஒருவருக்கும் முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கு. படம் வெளியாகும் வரைக்கும் அந்த நடிகர் யாரு என்கிற விஷயம் ரகசியமா வைக்கப்படும். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தோட பின்னணி இசையை இயற்ற ஆரம்பிச்சிட்டார். சர்வதேச விருதுகள் பல பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர்..இவர் இயற்கை நிலப்பகுதிகளை பதிவு பண்ணுவதில் கைத்தேர்ந்தவர். பாங்காங்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த படத்தோட விஷுவல் எபக்ட்ஸ் பண்ணுறாங்க. ஆசியாவில சிறந்த அனிமேஷன் கலைஞரான தாய்லாந்தை சேர்ந்த 'பாப்சந்த் ருக்ரந்சரித்' இப்படத்தோட அனிமேஷன் பகுதிகளை எடுக்குறார்.

ராஜஸ்தான்ல தங்களோட படப்பிடிப்பை வெற்றிகரமா முடிச்சிட்டு திரும்பியிருக்கிற படக்குழு இப்போ அடுத்தக்  கட்ட  படப்பிடிப்புக்கு ஹைதராபாத் நோக்கி கிளம்பிட்டு இருக்குறாங்க.ஆரஞ்சு மிட்டாய் மற்றும் றெக்க படத்தை தயாரித்த 'காமன் மேன் ப்ரெசன்ட்ஸ் ' பி.  கணேஷ் மற்றும் படத்தோட இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத் தான்  இந்த படத்தோட தயாரிப்பாளர்கள். 

இப்படியாக மிக வித்தியாசமான கதை களத்துடன் உலகளாவிய கலைஞர்களுடன் இப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர், இயக்குனர் ரத்தீந்தரன்பிரசாத்.  அவரின் ‘கொடைக்கானல் வோண்ட’ பாடல் வீடியோ உலகை திரும்பி பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாம், பாதர கழிவுகளை கொட்டிய யூனில்வர் நிறுவனத்திட மிருந்து கொடைக்கானல் மக்களுக்கு இழப்பீட்டினையும் பெற்றுத் தந்தது, சமூக வலைத் தளங்களில் மிக வேகமாக பரவிய அந்த வீடியோ பாராட்டுகளை அள்ளி குவித்ததோடு மட்டுமின்றி மிகபெரிய ஹாலிவுட் கலைஞர்கள் அஷ்டன் குட்சர், மார்க் ருவல்லோ, நிக்கி மினாச், கெய் கவசாக்கி, மற்றும் சேகர் கபூர் போன்றவர்களால் பகிரவும் பட்டது.

மேலும் நம் இயக்குநர் எழுதி இயற்றிய “ஸ்வேயர் கார்பரேஷன்” என்னும் குறும்படம் 26 சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டதோடு மட்டுமன்றி “கேன்ஸ்”  படவிழாவில் அள்ளி குவித்தது.  இவ்வருடம் அவரின் “சென்னை புறம்போக்கு பாடல்” அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எண்ணூர் பகுதியின் ஏற்படுத்தப்பட்ட சுற்று சூழல் சீர்கேட்டையும், அதனை ஏற்படுத்திய அதிகாரிகளின் அலட்சியத்தியும் தட்டிக் கேட்கும் இப்பாடலை பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா பாடியுள்ளார். இதுவும் சமூக வலைத் தளங்களில் தற்சமயம் வைரலாக பரவி வருகின்றது.  இப்படியாக சமூக அக்கறையுள்ள வீடியோக்களை இயற்றியுள்ள இயக்குநரிடம் இருந்து ஓர் நல்ல கதையை நாம் எதிர்பார்கலாம்.

 


Post your comment

Related News
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
தமிழ் பெண்ணை மணக்கவிரும்பும் ஹாலிவுட் கலைஞர்
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா
வேதாளம் வசூலை முறியடிக்குமா பைரவா? முழு விவரம்
வேதாளம் சாதனையை பைரவா முறியடிக்கவில்லையா? வெளிவந்த உண்மை நிலவரம்
வேதாளத்தை வென்று கபாலியிடம் தோற்ற பைரவாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions