கள்ளன் படத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி

Bookmark and Share

கள்ளன் படத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி

இன்றும் உலகமே இசைஞானி இளையராஜாவின் சாதனைகளையும், பெருமைகளையும் கண்டுவியக்கிறது. அவரின் இசையில் பல மெலோடிகளை பாடியவர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. அதை போல் அண்ணன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இசையிலும் மெலோடி பாடல்களை பாடியுள்ளார்.

இதை தவிர பல பக்தி ஆல்பங்களிலும் பாடி வரும் பவதாரிணி, இளையராஜா நடத்தும் அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தற்போது புதுமுகங்கள் நடிக்கும் கள்ளன் படத்திற்க்கு பவதாரிணி இசையமைக்கிறார். இப்படத்திற்காக முதல் இரண்டு மெலோடி டியூன்களை ரெடி பண்ணிய பவதாரிணியிடம், இளைஞர்களை மனதில் கொண்டு ஒரு குத்துப்பாட்டுக்கு டியூன் போட சொன்னார்களாம்.

அப்போது முதலில் தயங்கிய பவதாரிணி பின்னர் ஓகே சொன்னாராம். அதையடுத்து ஒரு பாடலாசிரியர் எழுதிய குத்துப்பாடலுக்கு பாஸ்ட் பீட்டில் டியூன் போட்டு அதிரடியான ஒரு குத்துப்பாடலை உருவாக்கினாராம் பவதாரிணி. இந்த குத்துப்பாட்டு பெரிய அளவில் எதிர்பாக்கப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions