நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்

Bookmark and Share

நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்

இளையராஜா பாடல்கள் பற்றிய சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. பலரும் பலவிதமாக கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவை பிரபல நடிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள மோகன் ராமன் தான் இப்படி செய்துள்ளார்.

"பாடல்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை, தயாரிப்பாளருக்கும் தான். பலருக்கு சொந்தமான ஒன்றின் ராயல்டி பணம் வசூல் செய்ய எப்படி நீங்கள் மட்டும் நோட்டீஸ் அனுப்ப முடியும். பாடலாசிரியர் அல்லது தயாரிப்பாளர் உங்களுக்கு அனுமதி கொடுத்தார்களா?" என கேட்டுள்ளார்.

உங்கள் வழக்கறிஞர் 'இளையராஜா பாடலை பாடி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் பாடகருக்கு தான் நோட்டீஸ் அனுப்பினோம். கோவில் கச்சேரியில் பாடுபவர்களுக்கு அல்ல' என சொல்லியிருப்பதை பார்த்தால், நீங்கள் பணம் தான் முக்கியம் என நினைப்பது தெரிகிறது. நீங்கள் ஞானி என நினைத்தேன், ஆனால் ஒரு ஞானி இப்படி செய்யமாட்டார்" என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions