இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

Bookmark and Share

இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று கூடியது.இதில் தமிழ் சினிமாவை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டன.

சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் சாதனையைப் பாராட்டி பெரும் விழா எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இளையராஜாவின் பாடல்களை ஒளி ஒலிபரப்பும் உரிமை மற்றும் படங்களில் பயன்படுத்தும் உரிமையின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தயாரிப்பாளர் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக இளையராஜா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions