இளையராஜா இசையில் 'கட்டம் போட்ட சட்ட'

Bookmark and Share

இளையராஜா இசையில் 'கட்டம் போட்ட சட்ட'

இளையராஜா அன்றிலிருந்து இன்று வரை பெரிய இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார், அறிமுக இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார். பெரிய நடிகர்கள் படங்கள், சிறிய நடிகர்கள் படங்கள் என்று எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார்.

ஆனால், இன்று வளர்ந்து வரும் பல இசையமைப்பாளர்கள் புதியவர்களின் படங்களுக்கு இசையமைக்கத் தயங்கி வருகிறார்கள். அந்த விதத்தில் இளையராஜா என்றுமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருப்பார்.

இப்போது அறிமுக இயக்குனர் அக்ஷயப் பிரியன் இயக்கும் 'கட்டம் போட்ட சட்ட' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 'நாடோடிகள், தரணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அஜய் கிருஷ்ணா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அக்ஷயப் பிரியன் தனியார் தொலைக்காட்சியில் 'ஊர்வம்பு' என்ற நிகழ்ச்சியை பல வாரங்கள் இயக்கியவர். பெரிய மனிதர் ஒருவரின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதையைக் கேட்டதும் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் இளையராஜா.

அதோடு உடனே ஐந்து பாடல்களுக்கும் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அதில் இளையராஜா இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். பழனிபாரதி, நா.முத்துக்குமார், முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.  


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்
இசைஞானியும் இசைமுரசும்.. மூன்று முத்தான பாடல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions