சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!

Bookmark and Share

சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!

தற்போதைய புதுமுக இயக்குனர்கள் இளையராஜாவை தங்கள் படங்களுக்கு இசையமைக்க வைக்க ஆசைப்பட்டாலும், ரொம்ப பெரிய இசையமைப்பாளர் இளையராஜா. அவரிடம் எப்படி நாம் வேலை வாங்க முடியும் என்று பயந்து மற்ற இசையமைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.

அதேசமயம், தைரியமாக இளையராஜாவிடம் இசையமைக்க செல்பவர்கள், அவரிடம் சென்றதும் அவர் ஒரு டியூனை போட்டுக்காட்டியதும், அந்த டியூன் ஒருவேளை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை இளையராஜாவிடம் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்களாம்.

ஆனபோதும், அவர்களின் தடுமாற்றத்தை புரிந்து கொள்ளும் இளையராஜா, அதை காட்டிக்கொள்ளாமல், சரி வேற டியூன் போடுறேன் கேளுங்க என்று வெவ்வேறு டியூன்களை சரமாரியாக போட்டுக்காட்டுகிறாராம்.

இப்படியாக அவர்களின் கண்களில் திருப்தி தெரியும் வரை டியூன்களை போட்டுக்கொண்டேயிருக்கிறாராம். இளையராஜாவின் இந்த மனநிலையை அவரிடம் இசையமைக்க சென்று விட்டு திரும்பிய புதுமுக இயக்குனர்கள் வெளியில் வந்து அவரை பெருமையாக சொல்கிறார்கள்.

அதோடு, நாம் நினைத்த மாதிரி இல்லை இளையராஜா. ரொம்ப பெரிய ஆளாக இருந்தாலும், எளிமையாக, இனிமையாக பழகுகிறார். குறிப்பாக, டியூன் விசயத்தில் அவர் காம்பரமைஸ் ஆவதே இல்லை. நம்முடைய திருப்தியை மனதில் கொண்டே செயல்படுகிறார் என்கிறார்கள். 


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்
இசைஞானியும் இசைமுரசும்.. மூன்று முத்தான பாடல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions