பாடல்கள் சட்டவிரோதமாக விற்பனை: இளையராஜா போலீசில் புகார்

Bookmark and Share

பாடல்கள் சட்டவிரோதமாக விற்பனை: இளையராஜா போலீசில் புகார்

தனது பாடல்களை தனியார் ஆடியோ நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஒலிபரப்புவதாகவும், விற்பனை செய்வதாகவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 6 ஆடியோ நிறுவனங்களுக்கு கோர்ட் நிரந்தர தடை விதித்தது.

உடனடியாக இளையராஜா தன் பாடல்களின் உரிமங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுத்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணை தலைவர் கதிரேன், செயலாளர் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயலட்சுமியை சந்தித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், இளையராஜா சார்பிலும் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இளையராஜா சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறேன். என்னுடைய பாடல்களை முறையான அனுமதி இன்றி விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருந்தாலும் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருப்பதாக பொய் சொல்லி விற்பனை செய்கிறார்கள்.

சென்னை கடைகளில் வீடியோ மற்றும் ஆடியோவாக எனது பாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எனக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க மனுவில் "இளையராஜவின் பாடல்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதால் அவர் இசை அமைத்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions