முதன் முறையாக டிரைலருக்கு மெனக்கெடும் இளையராஜா

Bookmark and Share

முதன் முறையாக டிரைலருக்கு மெனக்கெடும் இளையராஜா

இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்த படங்களைகூட தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. அதோடு டிரைலருக்கும் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஆனால் தற்போது அவர் இசை அமைத்து வரும் ருத்தரமாதேவி படத்தின் இசையில் அதீத அக்கறை செலுத்தி வருகிறார்.

இந்த படத்தின் முழு பின்னணி இசையையும் லண்டனில் வைத்து செய்ய இருக்கிறார். முன்னதாக இதன் டிரைலரை ரெடி பண்ணி இளையராஜாவிடம் கொடுத்தார் இயக்குனர் குணசேகரன்.

வழக்கமாக ஒரு மணி நேரத்துக்குள் டிரைலருக்கு இசை அமைக்கும் இளையராஜா. இதற்கு மூன்று நாள் வேண்டும். லைவ் ஆர்க்கெஸ்ட்ரா வைத்துதான் இசை அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு லைவ் ஆர்க்கெஸ்ட்ரா வைத்து அதற்கு இசை அமைத்தார். இசை அமைத்து முடித்தவுடன் அதை தியேட்டரில் திரையிட்டு எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்க முடிவு செய்தார்.

இதற்காக நேற்று (மார்ச் 17) சத்யம் தியேட்டரில் டிரைலர் திரையிடப்பட்டது. அதனை இளையராஜா, இயக்குனர் குணசேகரன், தமிழ் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி ஆகியோர் பார்த்தனர்.

முழு திருப்தியாக இருப்பதாக சொல்லிவிட்டுச் சென்றார் இளையராஜா.தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் ருத்ரமாதேவியில் அனுஷ்கா, ராணா, நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். படத்தின் தமிழ் வசனங்கள் மற்றம் பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions