பாரதியாரை விமர்சிக்கலாமா இளையராஜா...?

Bookmark and Share

பாரதியாரை விமர்சிக்கலாமா இளையராஜா...?

மகாகவி பாரதியார் எழுதிய பாடலைப் பற்றி நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இளையராஜா பேசியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அம்மா அன்னதானத் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து இளையராஜா பேசும் போது, “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் தப்பாகப் பாடி விட்டானே பாரதி என்று தோன்றும்.

அதில் மட்டுமல்ல, 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்,'னு சொன்னான். வெளிநாட்டுல இருக்கிறதையெல்லாம் இங்க கொண்டு வந்து சேருங்கடான்னு சொல்லிட்டான்.

அதுலயும் எனக்கு உடன்பாடில்லை.“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொண்டு அங்கு சேர்ப்பீர்,'னு பாடியிருக்கணும். 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சாப்பாடு போடுவோம்னு' அல்லவா பாடியிருக்கணும்.

சாப்பாடு போடுவோம், ஜெகத்தை எதற்கு அழிக்கணும். இயற்கையெல்லாம் விளைந்து கொட்டுகிறது, மழை பொழிந்தால் பயிர்கள் விளைகின்றன, மழை பொழிந்தால் பாறை கூட ஈரம் ஆகிறது, அந்த ஈரம் நம் மனதில் இல்லையா...தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால் அவனுக்கு உணவளிப்போம் என்ற திட்டம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்,” என்று பேசியுள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவளிக்காதவர்களைக் கண்டித்துத்தான் பாரதி அன்று பாடினான். அப்படி கொடுக்காத மனிதர்கள்  உள்ள ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான். ஆனால், பாரதி பாடிய பாடலையே மாற்றிப் பாடியிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் இளையராஜா.

அதோடு, 'கலைச் செல்வங்கள்' பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கலைச் செல்வங்கள் என்பது அறிவுச் செல்வங்கள் என்றுதான் பாரதி சொன்னான். அதை இளையராஜா பொருள் செல்வம் என்று எடுத்துக் கொண்டாரா என்றும் தெரியவில்லை.

பாரதியார் எழுதிய பாடலைப் பற்றி இளையராஜா விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது, பாரதியார் பாடியது சரிதானா, அல்லது அவரும் விமர்சனத்துக்குட்பட்டவர்தானா, அப்படியென்றால் பாரதியார் பாடிய பாடலையே விமர்சித்த இளையராஜாவும் விமர்சனத்துக்குட்பட்டவர்தானே...? இளையராஜா சொல்வதைப் போல் இங்கு மழை பொழிந்து விவசாயம் அவ்வளவாகக் கொழிக்கவில்லையே...

தண்ணீருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகளை அவர் பார்க்கவேயில்லையா...என்று பல கேள்விகள் எழுகின்றன. தமிழ் ஆர்வலர்களும், கவிஞர்களும்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்...


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions