ருத்ரமாதேவி படத்திற்காக லண்டன் சென்ற இளையராஜா

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்திற்காக லண்டன் சென்ற இளையராஜா

இளையராஜா தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக பொருட் செலவில் தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் தன்னிகரில்லா அரசியாக நாட்டை ஆண்ட ருத்ரமா தேவியின் வாழ்க்கை கதையாக இப்படம் தயாராகி வருகிறது. இதில் ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது.

இதற்காக இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். லண்டனில் இளையராஜா இரண்டு வாரங்கள் தங்கி படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
கமல் - இளையராஜா இயக்க வேண்டிய படத்தை நிராகரித்தேன் - இயக்குனர் அமீர்
இளைஞர்களே... உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன்!- இசைஞானி இளையராஜா
இசைக்கு நாடு, காலம் கிடையாது: வாஷிங்டனில் இளையராஜா பேட்டி
அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா
சரமாரியாக டியூன் போடும் இளையராஜா!
இளையராஜா இசையில் \'கட்டம் போட்ட சட்ட\'
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions