தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒன்பது ஹீரோயின்கள் வைத்து ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்க மங்கை அரிராஜன் இயக்கும் படம் 'இளமை ஊஞ்சல்'.
இதில் நடிகைகளாக நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி போண்ற கவர்ச்சி பட்டாளமே சேர்ந்து கலக்கியுள்ளதாம். இதற்கான படப்பிடிப்பு ஒகனேக்கல், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், மூணாறு போன்ற அடர்ந்த காட்டு பிரதேசங்களில் திடுக்கிடும் சம்பவங்களுடன் திகில் நிறைந்த காட்சிகளுடனும் கவர்ச்சியுடன் சஸ்பென்ஸ் நிறைந்ததாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
இக் கதைக்கேற்றபடி நடிகைகள் படம் பார்ப்பவர்களை கிறுங்கடிக்கும் வகையில் தமது உடலழகை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர் என்கிறார்: இப் படத்துக்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மங்கை அரிராஜன்.
கார்த்திக் பூபதிராஜா இசையமைக்கும் 'இளமை ஊஞ்சலுக்கு' கதைக்கேற்றபடி படலை எழுதியுள்ளார் கவிஞர் பிறைசூடன்,ஒளிப்பதிவு ஜே.ஜி கிருஷ்ணன்.
2012ல் இளம் ரசிகர்களை கொள்ளை கொள்ளப்போகும் படம் 'இளமை ஊஞ்சல்' தான் என கூறுகிறார் தனது பெயரிலே பெண்களை வைத்திருக்கும் இயக்குனர் மங்கை அரிராஜன்.
Post your comment
| Related News | |
![]() |


