எம்.எஸ்.விஸ்நாதன் பற்றி பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள்

Bookmark and Share

எம்.எஸ்.விஸ்நாதன் பற்றி பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள்

பிரபலங்களின் பார்வையில் எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் திரைப்பட துறையில் இவருடன் இணைந்து பணியாற்றியவர்கள், இவரை பற்றிய தெரிவித்த கருத்துக்கள்; 

பானுமதி (நடிகை) : "இவர் ஒரு படைப்பு மேதை . 

லதா மங்கேஷ்கர் (பாடகி) : "அத்தான்..... என்னத்தான்.... என்ற பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன் என்றார். 

ஜெமினி கணேசன் : எம்.எஸ்.வி., யின் இசை, காலம் உள்ளவரை நிலைத்திருக்கும். ஜெமினி, எம்.எஸ்.வி., யை "மாமானார் என்று அழைப்பதில் பெருமையாக இருக்கிறது என்பார்.  

சிவக்குமார் (நடிகர்) : எம்.எஸ்.வி., யின் இசைக்கு எனது இருதயத்தை இழந்து விட்டேன். எம்.எஸ்.வி., என்ற பெயரைக் கேட்டாலே மனதுக்குள் ஒரு இசை இன்பம் பெருகி விடும். எனது கல்லூரி நாட்களில் இவரது இசைதான் பொழுது போக்கு. இவரிடம் எந்த ஈகோவும் இல்லை. தலைக்கனமும் இல்லை. அனைவரிடமும் இயல்பாக பழகுவார். இவரின் இசையில் பல படங்களில் நடித்துள்ளேன். 

ஏ.ஆர்.ரஹ்மான் (இசையமைப்பாளர்) : எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இல்லாமல், தமிழ் திரையுலகில் எந்தவொரு இசையமைப்பாளரும் உருவாகி இருக்க முடியாது. வளரும் இசையமைப்பாளரை இவர் ஊக்குவிக்க தயங்கியதே இல்லை. இவரின் "தொட்டால் பூ மலரும்... பாடலை ரீமிக் செய்துள்ளேன். "வஞ்சம் இல்லாம பாரட்டனும் என்பது தான் எம்.எஸ்.வி., யின் தாரக மந்திரம். 

கமலஹாசன் (நடிகர்) : எனது சிறு வயது முதல், எம்.எஸ்.வி., யின் இசை தான் எனது காதிலும், மூச்சிலும் நிறைந்திருக்கும். பாரதியார், பாரதிதாசனை தவிர நான் ரசிக்கும் மற்ற மூவர் எம்.எஸ்.வி., , இளையராஜா மற்றும் சிவாஜி. சிறுவயதில் நான் கேட்ட எம்.எஸ்.வி.,யின் இசை, தற்போதும் அதே போல இருக்கிறது என நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது. 

சோ (நடிகர், பத்திரிகையாளர்) : எம்.எஸ்.வி., யின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.எஸ்.வி., ஒரு குழந்தை. ஆனால் அவர் இசைக்கு வந்த போது, இந்த குழந்தை மாபெரும் மன்னரானார். 

இளையராஜா (இசையமைப்பாளர்) : எனது புகழ் அனைத்தையும் எம்.எஸ்.வி.,யின் காலடியில் சமர்பிக்கிறேன். ஒரு இசையமைப்பாளனின் முகத்தை பார்த்தவுடன், இவருக்கு இசை திறமை இருக்கிறதா என்பதை சொல்லிவிடுவார்.

இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த திறமை இருக்கிறது. இதற்கு காரணம் "சரஸ்வதியின் அருள் இவருக்கு முழுவதுமாக இருக்கிறது. இவரது எத்தனை பாடல்கள் என்னை கரையை வைத்திருக்கிறது.

இத்தருணத்தில் என்னையே இழந்து விடுவேன். "அத்தான் என்னத்தான்..., "இரவும் பகலும்... , "நெஞ்சம் மறப்பதில்லை, "நிலவே என்னிடம்.. இது போன்ற எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன. இதற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகின்றேன். இசையில் நான் சம்பாதித்த அனைத்தையும், அவர் காலடியில் சமர்பிப்பேன். 

எஸ்.பி.முத்துராமன் (இயக்குநர்) : எம்.எஸ்.வி., யின் "ரீ - ரெக்கார்டிங் சாதனைகள் உண்மையிலே சூப்பர். 

நவுசத் அலி (இந்தி இசையமைப்பாளர்) : இவரது அனைத்து இசையிலும் வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இவர் என்னை "குரு என அழைக்கிறார். மற்றவர்களுக்கு மரியாதை தரும் இந்த குணம் தான் இவரது சிறப்பு.

ஆனால் உண்மையில் நான் இவரிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இவரது பாடல்கள் எனக்கு உத்வேகத்தை அளிக்கும். இவரது ரீ - ரெக்கார்டிங்கை பார்த்திருக்கிறேன். இவர் ஒரு நாளில் செய்வதை, நான் செய்வதற்கு 3 நாள்கள் ஆகும். 

வாணி ஜெயராம் (பாடகி) : நான் எம்.எஸ்.வி., யின் இசையை சிறு வயது முதல் கேட்கிறேன். 1973ல் எனது முதல் கச்சேரி. இந்த நிகழ்ச்சியை பார்த்த எம்.எஸ்.வி., என்னை புகழ்ந்து பேசினார். பின் நான் எம்.எஸ்.வி., யின் இசைக்குழுவில் சேர்ந்தேன். இவர் ஒரு இசைக் கடல். 

இவர் இசையமைக்கும் விதத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தேன். இசை உலகில் இவர் ஒரு தங்கம். கச்சேரியை தொடங்கு முன் எம்.எஸ்.வி., யின் போட்டோவை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். 

ஒய்.ஜி.மகேந்திரன் (நடிகர்) : நான் விழும் போது இரண்டு பேரை கூப்பிடுவேன். ஒன்று சிவாஜி. மற்றொருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,. 

ஜெயலலிதா (முதல்வர் ) : இவரது இசை திறனை பாராட்டி 2012 ஆகஸ்டில் "திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது அவர் கூறியது; 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். 300 இசைக் கருவிகளை கொண்டும் இசை அமைத்திருக்கிறார்;  மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் இசை அமைத்திருக்கிறார்.

ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர். தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர். மற்ற இசையமைப்பாளர்கள்,  இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் கொண்டவர்.  

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எஸ். விஸ்வநாதன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions