இளையராஜாவுக்கு கேரள அரசு விருது: உம்மன்சாண்டி 20–ந்தேதி வழங்குகிறார்

Bookmark and Share

இளையராஜாவுக்கு கேரள அரசு விருது: உம்மன்சாண்டி 20–ந்தேதி வழங்குகிறார்

திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா இதுவரை ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

மேலும் இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். திரைப்பட துறையில் அவர் படைத்த சாதனைகளை பாராட்டி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு கேரள அரசின் விருது வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதை கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி இளையராஜாவுக்கு வழங்குகிறார். 'நிஷாகந்தி சங்கீத விருது' என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியதாகும்.

இந்த விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களும் விருது பெறுகிறார்கள். மேலும் மலையாள திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். 


Post your comment





Related News
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions