இளையராஜாவின் இசைப்புரட்சி!

Bookmark and Share

இளையராஜாவின் இசைப்புரட்சி!

அன்னக்கிளி படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தற்போது தமிழில் பல படங்களுக்கு இசையமைக்கிறார் அதில் பாலாவின் தாரை தப்பட்டை அவருக்கு ஆயிரமாவது படமாகியிருக்கிறது.இதற்கிடையே சமீபத்தில் இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்துக்கு இசையமைத்த இளையராஜா, தற்போது தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் பிரமாண்டமாக வளர்ந்துள்ள ராணி ருத்ரமா தேவி படத்துக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

ஆக இப்போதும் பிசியான இசையமைப்பாளராகவே இருக்கிறார். அதுவும் இந்தியா முழுக்க பல மொழிப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இளையராஜா.இந்த நிலையில், இதுவரை தான் இசையமைத்த படங்களின் பாடல்களுக்கான ரைட்ஸை தானே வைத்திருந்த இளையராஜா, அந்த ஆயிரம் படங்களின் பாடல் ரைட்ஸையும் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கே கொடுக்கப்போகிறாராம்.

இதுவரை சினிமா வரலாற்றில் எந்தவொரு இசையமைப்பாளர்களும் பாடல்களுக்கான ரைட்ஸை முழுவதுமாக தயாரிப்பாளர்களுக்கு கொடுக்காத நிலையில், இளையராஜா இதை செய்தால் அது அவர் செய்யும் மிகப்பெரிய இசைப்புரட்சியாக இருக்கும் என்கிறார்கள்.

விரைவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறாராம் இளையராஜா.


Post your comment





Related News
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?
இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற பாடலாசிரியர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions