வெள்ள பாதிப்பு களத்தில் இறங்கிய இளையராஜா!

Bookmark and Share

வெள்ள பாதிப்பு களத்தில் இறங்கிய இளையராஜா!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகு மூலமும், வெள்ளத்தில் இறங்கியும், உணவு பொருட்களை வழங்கி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் மிதக்கிறது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அகதிகளை போன்று முகாம்களில் தங்கியுள்ளனர். பலர் வீட்டில் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். உண்ண உணவு, குடிக்க குடீநீர் என்று மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு சமைத்து கொடுத்து வருகின்றனர். ரஜினி, விஜய் தங்களது திருமண மண்டபங்களை கொடுத்து உதவியுள்ளனர்.

இந்நிலையில் அரசியல்வாதிகளே வானத்தில் பறந்தபடி வெள்ள சேதத்தை பார்வையிட்டு விட்டு சென்ற சூழ்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவரே படகு ஒன்றை ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.

 


Post your comment





Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions