இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற பாடலாசிரியர்!

Bookmark and Share

இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற பாடலாசிரியர்!

‘ஈசன்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதை...’ என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

இப்படத்தையடுத்து, ‘டேவிட்’, ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’, ‘விழா’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் தற்போது பாலா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாடல் எழுதியுள்ளார்.

இப்பட வாய்ப்பு குறித்து மோகன் ராஜன் கூறும்போது, ‘சண்டிவீரன்’ படத்தில் இடம் பெற்ற ‘தாய்ப்பாலும் தண்ணீரும்...’ என்ற பாடல்தான் ‘தாரை தப்பட்டை’யில் எனக்கு பாடல் எழுதும் வாய்ப்பை வாங்கி தந்தது.

இயக்குனர் பாலா அந்த வரிகளை மிகவும் ரசித்தார். தாரை தப்பட்டையில் ‘வதன வதன வடி வடிவேலனே...’ என்ற பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடல் வரிகளில் இளையராஜா ஒரு திருத்தம் சொல்லாமல் நன்றாக எழுதி இருக்கிறாய் என்று பாராட்டினார். அதற்காக இயக்குனர் பாலா எனக்கு ஒரு கடிகாரம் பரிசளித்தார்.

சிலருக்கு வாய்ப்பு வரலாறாக அமையும். எனக்கு ‘தாரை தப்பட்டை’ மூலம் வரலாறே வாய்ப்பாக கிடைத்துள்ளது. இளையராஜா, பாலா இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்த ‘சண்டிவீரன்’ பட பாடலை எழுத வைத்த சற்குணத்திற்கு என் வாழ் நாளெல்லாம் நன்றிகள்’ என்றார்.


Post your comment





Related News
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions