மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இளையராஜா

Bookmark and Share

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 2013–ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்ததையடுத்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. அவர் வழக்கம்போல் தனது உடலை பரிசோதித்துக் கொள்ளவே ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும், டாக்டர்கள் சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தியதன் பேரில், ஆஸ்பத்திரியிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓய்வுக்கு பிறகு இன்று இளையராஜா வீடு திரும்பியுள்ளார். இதை, இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, இசைஞானியின் ரசிகர்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் ஒரு நல்ல செய்தி. ராஜா அப்பா நன்றாக இருக்கிறார். அவர் வழக்கம் போல உடல் பரிசோதனைக்குதான் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வீடு திரும்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions