மழை மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது - இளையராஜா பேச்சு

Bookmark and Share

மழை மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது - இளையராஜா பேச்சு

மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிர்ந்தாலும்  பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து   மீட்டெடுத்திருகிறது. இதற்காககளமிறங்க்ய பல்வேறு தன்னார்வ  தொண்டு நிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களை பாராட்டி  சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது. இதில் இசையமைப்பாளர்  இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு  பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களைமீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு  தெரிவித்தனர். 

இதில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருந்த மனிதத்தன்மை இந்தபெரு மழை, வெள்ளத்தால் வெளிப்பட்டுள்ளது.  வெள்ளம்வருவதற்கு முன்பே இந்த மனநிலையில் நாம் இருந்திருந்தால் இந்த மழை வந்தே இருக்காது. 

இயற்கை சீற்றங்கள் எல்லாம் இறைவானால் ஏற்கென வேநிர்ணயிக்கப் பட்டவை. இயற்கை இறைவனின் வேலையாள். இறைவன்தான்  மனிதர்களின் மனதை பண்படுத்தி விட்டு வா என்றுமழையை அனுப்பி வைத்திருக்கிறார். இறைவனின் அந்ததண்டனையை இயற்கை நமக்கு கொடுத்து அதன் மூலம் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது. 

எப்போதுமே உணர்வுகள்தான் உண்மையானது. நான் அதிகமாகபொது  இடங்களில் இருப்பதை தவிர்த்து விடுவேன். நான் ஏன் இந்தசகதி,  வெள்ளத்தில் சென்று மக்களை சந்தித்தேன் என்றுதெரியவில்லை. அதற்கு  எனக்குள் இருக்கு உணர்வுகள்தான்காரணம். 

இந்த மழை கற்றுக் கொடுத்த பாடத்தைக் கொண்டு அடுத்த மழையை நாம்   எதிர் கொண்டு விடலாம் என நினைத்து விடவேண்டாம். சுனாமியின் போது எழுந்த பல விஷயங்கள் இந்த மழைக்கு உதவவில்லை. இந்த நொடியில்  நடக்கும் எந்தநிகழ்வையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான்  உண்மை. 

அடுத்த மழையை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற திறன்மட்டுமே இந்த  மழை நமக்கு தந்துள்ளது.  மழை, வெள்ளத்தால்நாம் இழந்ததை எதை  கொண்டும் ஈடு செய்ய முடியாது என்றார் இளையராஜா. 


Post your comment

Related News
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions