இளையராஜா மீது வழக்கா?

Bookmark and Share

இளையராஜா மீது வழக்கா?

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருத்தர் சிம்பு அனிருத் இருவரும் உருவாக்கிய பீப் ஸாங் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பாடலை குறித்து கருத்து கேட்டார். 

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாத இளையராஜா, “உனக்கு அறிவிருக்கா, என்னிடம் பேச உனக்கு தகுதி இருக்கா” என்றெல்லாம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதோடு அந்த செய்தியாளரை அவமானப்படுத்தவும் செய்தார்.

இளையராஜாவின் இந்த செயல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜா மீது வழக்குப்போட இருப்பதாக புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் அறிக்கயை வெளியிட்டுள்ளனர்.

அதில் “இசைஞானி இளயராஜா அவர்களே! உங்களின் இசையை கேட்டு உறங்கியவர்களும் நாங்கள்தான். உங்களின் பெருமையினை ஊருக்கு சொன்ன ஊடகவியலாளர்கள் நாங்கள்தான். நாட்டின் முதல் குடிமகனிடம் கூட மக்கள் நலனுக்காக கருத்து கேட்கும் அதிகாரத்தை ஜனநாயகம் எங்களுக்கு தந்துள்ளது.

எங்களை பார்த்தா அறிவு இருக்கின்றதா என்று கேட்கிறீர்? உங்களின் உயர்ந்த அறிவு உங்களை மட்டுமே வளர்த்தது இதுதான் உண்மை.ஆனால் எங்களின் அறிவை மக்களையும், சமுதாயத்தையும் உயர்த்தவும் பாதுகாக்கவும் பயன்படுத்தினோம்.எங்களை பார்த்து அறிவு இருக்கா என்று கேட்டது உங்களின் ஆணவத்தின் உச்சம் என்பதை நீங்களே உறுதி செய்துள்ளீர்.

செய்தியாளர்களை இழிவு படுத்தும் இது போன்ற செயலை இனியும் அனுமதிக்க முடியாது. உயர்திரு. இசைஞானி இளையராஜா அவர்களே உங்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் இன்று மாலைக்குள் முடிவு செய்யும்.

நாட்டின் நான்காவது தூணின் பெருமையினை இது போன்று ஆணவத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு இனி உணர்த்தும்.” என்று அதில் அறிவித்திருந்தனர்.


Post your comment





Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions