பசியில்லாத உலகத்தை உருவாக்குவோம் - இளையராஜா

Bookmark and Share

பசியில்லாத உலகத்தை உருவாக்குவோம் - இளையராஜா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், அம்மா அன்னம் அளிக்கும் திட்ட துவக்க விழா நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

விழாவில் இளையராஜா பேசியதாவது, தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியுள்ளார்கள். உணவு கிடைக்காவிட்டால் எதற்காக உலகத்தை அழிக்க வேண்டும், சாப்பாடு அல்லவா போட வேண்டும் என்று நான் சிந்தித்தது உண்டு.

இப்படியொரு பசி போக்கும் உணவு திட்டத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் கொண்டு வந்தது வரவேற்கதக்கது. எனக்கு கலை பசி இருந்தது. என்னுடன் இருந்த பழைய ஆட்கள் எல்லாம் இறந்துவிட்டனர்.

பணம், பேர், புகழ் எல்லாம் அப்படி மாற்றிவிட்டது. தயாரிப்பாளர்கள் சாதரணமானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு நல்ல நடிகர்களை உருவாக்குகிறார்கள்,  நல்ல இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களை உருவாக்குகிறார்கள், அவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் தயாரிப்பாளர்கள்.

சிலகாலம் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையின்றி இருந்தது. ஆனால் இப்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இப்படி ஒரு அருமையான திட்டத்தை உருவாக்கி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே... என்ற பாட்டை நான் பாடியதாக சொல்கிறார்கள். அம்மான்னா சும்மா இல்லடா... என்ற பாட்டையும் நான் பாடியிருக்கிறேன். இந்த திட்டத்தை துவக்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி.

பசி இல்லாத உலகத்தை உருவாக்குவோம்.இவ்வாறு இளையராஜா பேசினார். இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், பெப்சி சிவா, விக்ரமன், இப்ராஹிம் ராவுத்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Post your comment

Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions