என்னுள்ளில் எம்எஸ்வி., நிகழ்ச்சி - இளையராஜா பாடும் பாடல்கள்!

Bookmark and Share

என்னுள்ளில் எம்எஸ்வி., நிகழ்ச்சி - இளையராஜா பாடும் பாடல்கள்!

நெஞ்சம் மறப்பதில்லை...., உள்ளத்தில் நல்ல உள்ளம், மாலைப்பொழுதின் மயக்கத்திலே... என காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

உடலநலக்குறைவால் ஜூலை 14-ம் தேதி இந்த மண்ணை விட்டு பூவுலகிற்கு சென்றார்.  இந்நிலையில் எம்எஸ்.விஸ்வநாதன் அவர்களை தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, என்னுள்ளில் எம்எஸ்வி., எனும் இசை நிகழ்ச்சியை வருகிற ஜூலை 27ம் தேதி, சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார்.

இதில் எம்.எஸ்.வி., அவர்களின் சிறந்த பாடல்களை இளையராஜா பாட இருக்கிறார். அத்துடன் அவர் எப்படி இசை நுணுக்கங்களை பயன்படுத்தினார் என்பதை மக்களிடத்தில் விளக்கும் நிகழ்ச்சியாகவு இது இருக்கும் என்று இளையராஜா கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா தற்போது ஒரு வீடியோவை வௌியிட்டுள்ளார். அதில் இளையராஜா கூறயிருப்பதாவது... நம்மையெல்லாம் இசை வௌ்ளத்தில் ஆழ்த்தி நம் மனதில் தனியாக குடி கொண்டிருக்கும் அண்ணன் எம்.எஸ்.வி., அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அஞ்சலி என்று சொல்வதை விட அவரை நினைவுகூறும் பொருட்டு என்னுள்ளில் எம்எஸ்வி எனும் இசை நிகழ்ச்சியை எனது இசை குழுவுடன் நடத்த இருக்கிறேன். இதில் எனக்கு பிடித்தமான சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமான பாடல் தான் என்றாலும், அந்த பாடல்களில் உள்ள உன்னதத்தை உங்களுக்கு உணர்த்த இருக்கிறேன்.

என்னுடைய ஆத்மார்த்தமான அண்ணனுக்கு நான் செய்யும் நன்றி கடன் இது என்று கூறியுள்ளார். இதனிடையே இளையராஜா என்ன என்ன பாடல்கள் பாட போகிறார் என்பது பற்றிய தகவல் வௌியாகியுள்ளது.

அதில் முக்கியமாக   பாக்யலட்சுமி   படத்தில், பி.சுசீலா அவர்கள் பாடிய   மாலைப்பொழுதின் மயக்கத்திலே...   பாடல், எம்எஸ்.விஸ்வநாதனும், இளையராஜா அவர்களும் சேர்ந்து இசையமைத்த,   மெல்ல திறந்தது கதவு   படத்தில் இடம்பெற்ற   குழல் ஊதும் கண்ணனுக்கு....   பாடல் உள்ளிட்ட பல பாடல்களை பாட இருக்கிறார்.  

அவர் அடிக்கடி சொல்வது போன்று,   இறக்கும் மனிதர்கள் இறவா பாடல்கள்...   என்ற வாக்கியம் நிதர்சனமான உண்மை. அவர் கொடுத்த பாடல்கள் என்று அழியாதவை தான்.


Post your comment

Related News
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions