ஒரே வாரத்தில் பின்னணி இசையமைத்த இளையராஜா!

Bookmark and Share

ஒரே வாரத்தில் பின்னணி இசையமைத்த இளையராஜா!

மெய் மறக்கச் செய்யும் இசையாகவும், உருக வைக்கும் இசையாகவும் இருக்க வேண்டும் என நினைக்கும் திரைப்பட இயக்குநர்கள் அவர்கள் படத்துக்கு சிறப்பான பின்னணி இசை வேண்டுமென நினைத்தால் முதலில் தேர்வுசெய்வது இளையராஜாவைத்தான்.

காக்கா முட்டை என்ற சிறந்த படத்தைக் கொடுத்த இயக்குனர் மணிகண்டன் தனது அடுத்தபடமான குற்றமும் தண்டனையும் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். முதலில் படத்தைப் பார்த்த இளையராஜா படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்து ஆலோசனையையும் சொல்லியிருக்கிறார்.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் குற்றமே தண்டனை, பின்னர் எதற்கு குற்றமும் தண்டனையும் என்று பெயர் எனக் கேட்டிருக்கிறார். உடனே மணிகண்டனும் படத்திற்கு குற்றமே தண்டனை என பெயரை மாற்றிவிட்டார். விதார்த், ஐஸ்வர்யா, பூஜா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா ஏழே நாட்களில் சிறப்பானதொரு பின்னணி இசையை அமைத்துக் கொடுத்துவிட்டாராம். பாடல்களே இல்லாத இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தின் மூலம் மணிகண்டன் மீண்டும் ஒரு அழுத்தமான பதிவை ஏற்படுத்துவார் என நம்பலாம்.


Post your comment





Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions