இளையராஜாவின் தமிழ் பாடல் இந்தி படத்துக்கு ரீமிக்ஸ் ஆகிறது!

Bookmark and Share

இளையராஜாவின் தமிழ் பாடல் இந்தி படத்துக்கு ரீமிக்ஸ் ஆகிறது!

இந்தியில் பால்கி இயக்கத்தில் வெளியான படம் ஷமிதாப். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. ஏற்கனவே பால்கி இந்தியில் இயக்கிய சில படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த பால்கி, இளையராஜாவை நேரில் சென்று சந்தித்தாராம். அப்போது, கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் பாடல் கேசட்டை பார்த்தவர், அந்த பாடல்களை கேட்டாராம்.

அப்போது, அதில் இடம்பெற்ற சின்ன புள்ள என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் அந்த பாடலை தான் அடுத்து இந்தியில் இயக்கும் படத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள இளையராஜாவிடம் அனுமதி கேட்டாராம்.

அதற்கு இளையராஜாவும் ஓகே சொல்லி விட்டாராம். பால்கி இயக்கும் அடுத்த இந்தி படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions