சர்வதேச திரைப்படவிழாவில் இளையராஜாவுக்கு விருது!

Bookmark and Share

சர்வதேச திரைப்படவிழாவில் இளையராஜாவுக்கு விருது!

இளையராஜாவின் முதல் ஆங்கிலப் படமான ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ ஜூலியன் கரிகாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆஸ்திரேலியப் படம். படத்தின் இயக்குநரான ஜூலியன் கரிகாலன் மதுரையை அடிப்படையாகக் கொண்ட ஆஸ்திரேலிய வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் இசைக்காக இளையராஜாவுக்கு விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு மூன்று பாடல்களை இளையராஜா அமைத்துள்ளார். பின்னணி இசைக் கோர்ப்பு ப்ரெண்ட் ஹிபெர், மற்றும் கதை திரைக்கதை, தயாரிப்பு ஜூலியன் கரிகாலன்.

பஞ்சாபி இளைஞன் ஒருவன் ஆஸ்திரேலியாவிற்கு படிக்கச் செல்கிறான். படித்துக்கொண்டே ஒரு டிபார்ட்மெண்டல் கடையில் வேலை செய்கையில் அங்கே வேலை செய்யும் ஆஸ்திரேலியப் பெண்ணுடன் காதல் உண்டாகிறது. இந்திய, ஆஸ்திரேலிய உள்ளங்கள் இணைகையில் இருவருக்குமான கலாச்சாரம் பேசத் துவங்குகிறது. முடிவு என்ன என்பதே படத்தின் கதை. இப்படம் நேரடியாக உலக சினிமா விழாக்களில் திரையிடப்பட்டன.

இந்த படத்தின் தலைப்பான லவ் அண்ட் லவ் ஒன்லி இளையராஜா இசையில் ஹிட்டடித்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இடம்பெறும் ‘Love And Love Only' புத்தகத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் சிறந்த இசைக்காக ஆஸ்திரேலியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குநருக்காக ஜூலியன் கரிகாலனுக்கும் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions