பிறந்தநாள்: இளையராஜா - மணிரத்னத்தை கொண்டாடிய ரசிகர்கள்

Bookmark and Share

பிறந்தநாள்: இளையராஜா - மணிரத்னத்தை கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இன்று(ஜூன் 2ம் தேதி) பிறந்தநாள். ஒருவர் இசையில் சாகசம் படைத்தவர், மற்றொருவர் கதை, திரைக்கதை, இயக்கத்தில் சாதனை படைத்தவர்.

அந்த இருவர் வேறுயாருமல்ல இளையராஜாவும், மணிரத்னமும் தான். அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

தற்போதும் அவரது இசை சுக ராகமாக திகழ்கிறது. எக்காலத்திலும் ராஜா ராஜா தான் என்று நிரூபித்தவர். அதேப்போல், பல்லவி அனு பல்லவி எனும் கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தமிழில் பகல்நிலவு படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். ரஜினி, கமல் தொடங்கி இந்தக்கால துல்கர் சல்மான் வரை பல ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ளார். மணிரத்னம் படம் என்றாலே அதில் ஒரு அழகான காதல் இருக்கும். காதலை இவரை போல வேறுயாரும் அழகாக படமாக்கி இருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல அவரது படங்கள் என்றாலே கதையும், திரைக்கதையும் அப்படி ஒரு வலுவானதாக இருக்கும். இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து பல படங்களுக்கு இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். மணிரத்னம், இயக்கிய பகல்நிலவு தொடங்கி தளபதி வரை அத்தனை படங்களுக்கும் இளையராஜா தான் இசை. அதன்பின்னர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் மாறினார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் இன்று பிறந்தநாள்.இதையொட்டி டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக இளையராஜாவை, இசை அரசன், இசை கடவுள் என ஏக மனதாக புகழ்வதோடு, இளையராஜாவின் ஹிட் பாடல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு, யூ-டூயூப் லிங்கையும் சேர் செய்துள்ளனர்.

மேலும் இளையராஜாவின் பிறந்தநாளை #HBDRajasir என்ற ஹேஷ்டேக் உருவாக்கி தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் டிரெண்டிங்கில் இடம் பெற செய்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions