பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா - பரபரப்பு தகவல்

Bookmark and Share

பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா - பரபரப்பு தகவல்

சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா இன்று கலந்துகொண்டார்.  விழா முடிவில் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

பீப் பாடல் குறித்த கேள்வியை எழுப்பிய செய்தியாளரிடம் எதிர் கேள்வியை எழுப்பினார் இளையராஜா. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்களின் கலந்துரையாடல் விவரம்...

செய்தியாளர்: சிம்பு தவறுதலான பாடல் பாடியுள்ளது பற்றி?

இளையராஜா: உனக்கு எதாவது இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?

செய்தியாளர்: சார், அறிவு இருந்ததால தான் கேக்குறேன்!

இளையராஜா: அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?

செய்தியாளர்: ஒரு இசையமைப்பாளர் நீங்க? உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு? 

இளையராஜா: யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க? (சிரித்தவாறு)

தொடர்ந்து இளையராஜாவுக்கும் செய்தியாளருக்குமிடையேயான விவாதம் பின்னர் சுமுகமாக முடிந்ததையடுத்து பரபரப்பு குறைந்தது.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions