திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் இளையராஜா!

Bookmark and Share

திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் இளையராஜா!

1000 படங்களுக்கு இசையமைத்த பிறகும் தமிழ், தெலுங்கு. இந்தி எனறு பரவலாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா. இப்படி இசைப்பணிகளில் பிசியாக இருக்கும் அவர், முன்பெல்லாம் ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் தவறாமல் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதனால் அவரை சந்திக்க விரும்பும் ஆன்மீகவாதிகள் அன்றைய தினத்தில் திருவண்ணாமலையில்தான் இளையராஜாவை சந்திப்பார்கள். அதேசமயம் சினிமா நபர்களை அவர் அங்கு சந்திப்பதில்லை.

மன அமைதிக்காக செல்வதால் பெளர்ணமி அன்று இரவு முழுக்க நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து தியானம் செய்வார். ஆனால், சமீபகாலமாக, முன்பு மாதிரி இல்லாமல் அடிக்கடி இளையராஜாவை திருவண்ணாமலையில் பார்க்க முடிகிறது என்கிறார்கள்.

அதாவது, இசையமைக்கும் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அவ்வப்போது திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் இளையராஜா, கண்களை மூடிய நிலையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு விடுகிறாராம்.

அந்த சமயத்தில் அங்கு கூடும் பக்தர்களால் தொந்தரவுகள் ஏறபட்டால்கூட அவர் தனது தியானத்தில் இருந்து விடுபடுவதில்லையாம். அந்த அளவுக்கு மனதை ஒருமுகப்படுத்தி அமர்ந்திருக்கிறாராம் இளையராஜா.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions