யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தங்க செயின் அணிந்து ஆசீர்வதித்த இளையராஜா!

Bookmark and Share

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தங்க செயின் அணிந்து ஆசீர்வதித்த இளையராஜா!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஜாபர்நிஷா என்ற மலேசிய பெண்ணை மூன்றாவதாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்தில் அவரது தந்தையான இளையராஜா, சகோதரர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவரது சகோதரி பவதாரிணி மட்டுமே கலந்து கொண்டார்.

அதையடுத்து யுவன்ஷங்கர் ராஜா மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டதாகவும், பெரும்பாலும் அவர் மலேசியாவிலேயே முகாமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.  

இந்த நிலையில், திருமணம் செய்து கொண்ட யுவன்ஷங்கர் ராஜா- ஜாபர்நிஷாவை இருவரும் இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதாக தற்போது அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதுபற்றி அவர்கள் கூறுகையில்,

இளையராஜா ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டிலேயே மூகாம்பிகை கோயில் உள்ளது. அந்த கோயிலில் தினமும் பூஜை நடக்கிறது. அதோடு, அவரும் அடிக்கடி திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில், ஒரு முஸ்லீம் மதத்தைச்சேர்ந்த பெண் வீட்டிற்கு வந்தால், இங்கு நடக்கும் இந்து சடங்குகள் அவருக்கு கஷ்டத்தை கொடுக்கும். அதன்காரணமாகவே யுவனை தற்போது சென்னை சாலிகிராமத்தில் தான் புதிதாக வாங்கியிருக்கும் இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு இளையராஜா கூறியிருக்கிறாராம்.

மேலும், திருமணம் செய்து கொண்டு அவரை பார்க்க வந்தபோது, யுவன்ஷங்கர் ராஜா- ஜாபர்நிஷா ஆகிய இருவருக்கும் தலா 10 பவுனில் இரண்டு செயின்களை அணிவித்து வாழ்த்தினாராம் இளையராஜா.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions