முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்

Bookmark and Share

முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்

இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இசையில் யுவன் சங்கர் ராஜாவும், யுவனின் இசையில் இளையராஜாவும் நிறைய பாடல்கள் பாடியுள்ளனர். ஆனால், இருவரும் இணைந்து ஒரு படத்திற்குகூட இசையமைத்ததில்லை. 

ஆனால், அது தற்போது கைகூடி வந்துள்ளது. ‘தர்மதுரை‘ படத்திற்கு பிறகு சீனுராமசாமி அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜாவின் YSR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், யுவனும் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து இசையமைக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது. 

இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல்முறை என்றாலும், இளையராஜா ஏற்கெனவே ஒரு படத்தில் மற்றொரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விஸ்வதுளசி’ என்ற படத்திற்காக இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

சீனுராமசாமி இயக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions