இந்தியில் வாய்ப்பில்லை டோலிவுட்டில் மீண்டும் இலியானா

Bookmark and Share

இந்தியில் வாய்ப்பில்லை டோலிவுட்டில் மீண்டும் இலியானா

சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு முறை இடத்தை நழுவவிட்டால் மீண்டும் பிடிப்பது கடினம். அதில் வெற்றி பெற்றவர் தற்போதைக்கு நயன்தாரா மட்டும்தான். இந்த ஆசை  இலியானாவுக்கும் வந்திருக்கிறது. டோலிவுட்டில் முன்னணி இடத்தில் இருந்த அவர் ஓரிரு தமிழ் படங்களிலும் நடித்து வந்தார்.

இரண்டு படவுலகையும் கைகழுவிவிட்டு  பாலிவுட்டுக்கு  பறந்தவர். அங்கு கடும்போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். மீண்டும் டோலிவுட் பக்கம் தனது பார்வையை திருப்புகிறார்.

ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு குத்து பாட்டு ஆட வாய்ப்பு சென்றிருக்கிறது. வி.வி.விநாயக் இயக்கத்தில் அமலா-நாகார்ஜுனா மகன் அகினேனி அகில் நடிக்கும்  படத்தில் குத்தாட்டம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதை பயன்படுத்தி டோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்று எண்ணி இருக்கிறார் இலியானா. அதை  வெளிக்காட்டாமல் குத்தாட்டம் ஆடுவதென்றால் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கான சம்பளம் தந்தால் ஓ.கே என பேரம் பேசி இருக்கிறார். இயக்குனர் தரப்பும் அதற்கு ஓ.கே.  சொல்லி இருக்கிறதாம்.

ஒப்பந்தம் கையெழுத்தானதும் அறிவிப்பு வெளியிட பட குழு திட்டமிட்டிருக்கிறது. இதில் அகிலுக்கு ஜோடியாக இளம் நடிகை சயெஷா சைகல் நடிக்கிறார். 


Post your comment





Related News
திருமணத்துக்கு தயாரான இலியானா
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்
காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை – வீடியோ உள்ளே!
பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி!
பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா
சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார்: இலியானா
தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions