சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா

Bookmark and Share

சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா

சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பல இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்பதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான இலியானாவுக்கு அங்கு மவுசு இல்லை. இருப்பினும் மும்பையிலேயே தங்கி கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகையில்,சினிமா எனக்கு உயிர் போன்று.

ஆனால் அதில் மூழ்கிவிடாதே என்று இதயம் கூறுகிறது. இதயம் சொல்வதையே கேட்க விரும்புகிறேன். சினிமா தான் உலகம் என இருக்க மாட்டேன்.சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வந்த பல இளம்பெண்கள் நினைத்தது நடக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

அதை எல்லாம் பார்த்து பக்குவப்பட்டுள்ளேன்.பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதை நினைத்து வருந்த மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் 7 ஆண்டு காலம் நிலைத்திரு்தேன்.எனக்கு 30 வயது ஆகிறது.

வயதை சொல்ல வெட்கப்படவில்லை. அதை மறைத்தும் வைக்க மாட்டேன். வயது வெறும் எண் தான். நீங்கள் பார்ப்பதற்கு 23 வயது பெண் போன்று இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறுவதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.


Post your comment





Related News
அனிருத்திற்கு திருமணம், பெண் இவரா?
காற்று வெளியிடை படத்தின் கதையை லீக் செய்த தணிக்கை குழு- இந்த படத்தின் தழுவலா?
காதல் மன்னாக மாறும் சூரியா! யாருடன் தெரியுமா
பெரிய நடிகரின் தம்பி- ஆனால் சினிமாவில் வர கஷ்டப்பட்ட பிரபல வில்லன் நடிகர்
சிம்பு ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட பிரபல நடிகை
அஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் ! வைரலாகும் வீடியோ
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions