‘தனி ஒருவன்’ ரீமேக் கதாநாயகி இலியானா!

Bookmark and Share

‘தனி ஒருவன்’ ரீமேக் கதாநாயகி இலியானா!

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இலியானா, இந்தி பட ஆசையில் பாலிவுட் சென்றார். ஆனால் அங்கு இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்ப செக்ஸ் குறித்து பகிரங்கமான கருத்துக்கள் கூறினார்.

இதெல்லாம் பரபரப்புக்கு பயன்பட்டதே தவிர வாய்ப்பை தேடித் தரவில்லை. மீண்டும் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு, நயன்தாரா, ஹன்சிகா, காஜல், தமன்னா, சமந்தா, ஸ்ருதியின் ஆட்சியால் அங்கும் வாய்ப்பு கிடைப்பது கடினமானது. 

இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவானது. இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வால், சமந்தா போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டன. தற்போது அந்த வாய்ப்பு இலியானாவுக்கு சென்றிருக்கிறது.

இப்படம் மூலம் அவர் மீண்டும் தெலுங்கில் ரீ என்ட்ரி ஆகிறார். புது வேகத்துடன் இலியானா வருவதால் போட்டி வலுத்துள்ளதை எண்ணி சக ஹீரோயின்கள் கலக்கம் அடைந்துள்ளனராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions