வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா!

மங்களூருக்கு குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவை, பெங்களூர் விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தியதாக நேற்று வெளியான செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இளையராஜா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

இதெல்லாம் ரொம்பவும் சாதாரண விஷயம். செக்யூரிட்டியில் இருக்கிறவங்க சாதாரணமாக செக் பண்ணுவது எல்லா இடத்துலயும் நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். அதை நான் பெரியதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 

இதைவிட டார்ச்சர் பண்றமாதிரி நடந்துகிட்ட விஷங்களை எல்லாம் நான் கடந்து போயிருக்கிறேன். அதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை. அவரவர் தங்கள் வேலையை செய்யவில்லையென்றால் இந்தியா இந்தியாவாக இருக்காது. நான் தேங்காய் பிரசாதம் எடுத்துச் சென்ற பையை அவர் திறந்து காட்ட சொன்னார். திறந்தும் காட்டியாச்சு, அவ்வளவுதான். 

தேவையில்லாத விஷயத்தில் இந்திய மக்கள் ஏன் தங்களது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு பெரிய வருத்தம். ஏனென்றால், எனக்கே அது பெரிய விஷயமாக தெரியவில்லை. எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படி நடக்கட்டுமே. அதனால் நமக்கென்ன. 

என்னை சோதிப்பதன் மூலம் அவர் பெரியவராகிவிடுவார், நான் சிறுமையாகிப் போவேன் என்பது இல்லை. நான் எப்போதும் ராஜாதான். அந்த இடத்தில் அவருடைய வேலையை அவர் செய்கிறார். அதை நான் அனுமதிக்கிறேன். அதற்கு ஒத்துழைக்கிறேன். அங்கே நான் சண்டையும் போடவில்லை. அவரும் என்னுடன் சண்டை போடவில்லை என்று கூறினார்.


Post your comment





Related News
இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.!
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இளையராஜா இசையில் உருவாகும் இந்தியாவின் முதல் சமஸ்கிருத திரைப்படம்!
இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்
அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜா!
மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்!
இளையராஜாவிற்கு விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!
நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions