ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா

Bookmark and Share

ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  பாகுபலி படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

இன்று தெலுங்கின் மற்றொரு கமர்ஷியல் இயக்குனரான குணசேகர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சரித்திரப் படமான  ருத்ரமாதேவி படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளது.

இன்று சென்னையில் நடக்கும் ஒரு எளிய நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகுபலி படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும்  தனித் தனியாக எடுத்துள்ளனர். ஆனால்,  ருத்ரமாதேவி படம் அப்படி எடுக்கப்பட்ட ஒரு படமா என்பதை இயக்குனர் இதுவரை அறிவிக்கவில்லை. கோலிவுட்டில் இந்தப் படம் ஒரு முழுமையான டப்பிங் படமாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளத்தில் டப்பிங்காகவும் இந்தப் படம் வெளியாக உள்ளது. 

சுமார் 75 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்  பாகுபலிக்கு எந்த விதத்திலும் போட்டியாக இருக்க முடியாது டோலிவுட் கலைஞர்களே தெரிவிக்கிறார்கள். பாகுபலி படத்தின் பட்ஜெட் 250 கோடி என்று சொல்லப்படுகிறது.

அந்தப் படத்திற்கான கிராஃபிக்ஸ் காட்சிகள் உலகத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ருத்ரமாதேவி படம் அந்த விதத்தில் இருக்க வாய்பிப்ல்லை என்றே சொல்கிறார்கள். 

இருந்தாலும், கதையும், திரைக்கதையும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அனுஷ்கா நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அருந்ததி படத்தின் வெற்றியை விட இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்!
இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி!
இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா
இளையராஜா - வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.
குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு
இளையராஜாவின் கோபம்!
ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்: பிரசன்னா பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions