புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

Bookmark and Share

புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் வயது 44. தாய் தந்தை மறைந்து விட்ட நிலையில் உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.

தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். புகைப்பழக்கம் உள்ள இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடர்ந்து இருமல் வந்ததால் மருத்துவரிடம் காட்டியிருக்கிறார்கள்.அங்கு அவரை பல கட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு புற்று நோய் முற்ற்ய நிலையில் இருப்பதை  கண்டுபிடித்தனர்.

ரவிச்சந்திரன் மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன மருத்துவர்கள் அவர் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.அப்போது ரவிச்சந்திரனிடம் உறவினர்கள் அவரது ஆசையை கேட்க, தீவிர இளையராஜா ரசிகரான ரவிச்சந்திரன் ஒரே ஒரு முறை இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று கூறிருக்கிறார். இந்த தகவல் இசைஞானி இளையராஜாவிடம் சொல்லப்பட, அவரும் உடனே வரச்சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி உறவினர்கள் அவரை இளையாராஜா இசையமைக்கும்  பிரசாத் ஸ்டுடியோவிற்கு ரவிச்சந்திரனை அழைத்து வந்தனர்.அங்கு இளையராஜா ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் கூறி பாசத்தோடு விசாரித்தார்.

அப்போது ரவிச்சந்திரன் “ஐயா எண்பதாம் ஆண்டிலிருந்து உங்களின் தீவிர ரசிகன் சோகம் சந்தோஷம் எதுவானாலும் எனக்கு உங்கள் பாட்டுதான். கவலை மறந்து இருப்பேன்யா” என்று கூற நெகிழ்ந்து போன இளையராஜா ரவிச்சந்திரனை முதுகில் தட்டிக்கொடுத்தார்.

அந்த நிமிடங்களில் ரவிச்சந்திரன் உட்பட  அவரது குடும்பத்தினர் கண்கலங்கினார்கள். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த இளையராஜாவின் கண்களும் கலங்கியிருந்தன.

 


Post your comment





Related News
இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்!
இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி!
இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
இளையராஜா - வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.
குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு
இளையராஜாவின் கோபம்!
ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா
ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்: பிரசன்னா பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions