இளையராஜாவின் கோபம்!

Bookmark and Share

இளையராஜாவின் கோபம்!

பாலாவின் தாரைதப்பட்டையோடு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜாவின் கைவசம் இப்போது பல படங்கள் உள்ளன.

இந்தியில் அமிதாப்பச்சன்-தனுஷ் நடித்த ஷமிதாப் படத்துக்கு இசையமைத்தவர், தற்போது பிரமாண்ட சரித்திர படமான ராணி ருத்ரம்மா தேவி, தாரைத்தப்பட்டை, மகுடி, நாடி துடிக்குதடி, கலைஞனின் காதல், வாராயோ வெண்ணிலாவே, காமராஜ் உள்பட மேலும் சில படங்களுக்கு பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

இதுதவிர இந்தியில் ஹேப்பி மற்றும் கன்னடத்தில் நானு நீனு ப்ரீத்தி என பல படங்களுக்கு பரவலாக இசையமைத்து வருகிறார். ஆனால், அவர் பீல்டில் பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கும்போதே, அவரது ஹிட் பாடல்களை சில படங்களில் ரீமிக்ஸ் செய்தனர். இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இப்போது அதை நிறுத்தி விட்டனர்.

மாறாக, பல படங்களில் சூழலுக்கேற்ப அவரது சூப்பர் ஹிட் பாடல்களை பிட் பிட்டாக பயன்படுத்தி வருவது குறையவில்லை. இந்த சேதி இளையராஜாவின் காதுக்கு செல்லும்போது ரொம்பவே கோபப்படுகிறாராம்.

அவர்கள் இசையமைக்கும் படங்களுக்கு அவர்களே டியூன் போட வேண்டியதானே. அதை விட்டுவிட்டு எனது பாடல்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் இளையராஜா, விரைவில் தனது ஹிட் பாடல்களை தான் இசையமைக்காத படங்களில் பயன்படுத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்போகிறாராம்.


Post your comment





Related News
இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்!
இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி!
இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா
இளையராஜா - வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.
குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு
ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா
ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்: பிரசன்னா பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions