குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு

Bookmark and Share

குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அதன் விளைவாக அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுண்டு.

திடீரென்று அது அதிகமாகவே அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துமணை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா அவரை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.

நேற்றும் இளையராஜா எம்.எஸ்.வியை சந்தித்தார். அவர் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அவர் திட உணவு உண்ணலாம் என்றாலும் அதனை எம்.எஸ்.வி மறுத்து வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட இளையராஜா அவரை சமாதானப்படுத்தி தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வரச்செய்து ஊட்டி விட்டார்.

இதனால் எம்.எஸ்.வி சிறிது உணவு உட்கொண்டார். இன்று அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதராண வார்டுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அவரது மகன் எம்.எஸ்.வி.கோபி அருகில் இருந்த கவனித்து வருகிறார்.


Post your comment





Related News
இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்!
இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி!
இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா
இளையராஜா - வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.
இளையராஜாவின் கோபம்!
ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா
ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்: பிரசன்னா பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions