கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு சாதனையாளர் விருது

Bookmark and Share

 கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு சாதனையாளர் விருது

கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும், திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு சுற்றுலா துறை மந்திரி ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார். 

முதல்-மந்திரி உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. நடன, இசை விழாவை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளாக சாதனையாளர்களுக்கு கேரள அரசு சார்பில் நிசாகந்தி விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இசை அமைப்பாளர் இளைய ராஜாவுக்கு சாதனையாளர் விருதை முதல்-மந்திரி உம்மன்சாண்டி வழங்கினார். 

இதில் கேரள தலைமைச்செயலாளர். ஜிஜி தாம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கலை இலக்கிய துறையில் சாதனை படைத்து வரும் சூர்யா கிருஷ்ணமூர்த்திக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

விழாவில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி பேசும் போது கூறியதாவது;- இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று விட்டது.

கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. 
அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions