இளையராஜாவுடன் மீண்டும் இணைந்த கௌதம்மேனன்

Bookmark and Share

இளையராஜாவுடன் மீண்டும் இணைந்த கௌதம்மேனன்

பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பெரியஅளவிலான பாராட்டுவிழாவை நடத்த விஜய் தொலைக்காட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக சில சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றைத்தாண்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருவதாகச் சொல்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவிடம் ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்நேர்காணலை இயக்குநர் கௌதம்மேனன் எடுத்திருக்கிறாராம்.

சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையோரம் அந்நேர்கணால் படமாக்கப்பட்டிருக்கிறது. காலை ஏழு மணிக்குத் தொடங்கிய பேட்டிக்கான படப்பிடிப்பு மாலை ஐந்துமணிவரை நடந்ததாம்.

அதில் இளையராஜாவும் கௌதம்மேனனும் நடந்துகொண்டே பேசுவது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்கிறார்கள். அந்த நேர்காணலில் இளையராஜா பகிர்ந்துகொண்டிருக்கும் பல்வேறு செய்திகள் புதிதாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறதென்கிறார்கள்.

இளையராஜா இசையில் நீதானே என்பொன்வசந்தம் படம் எடுத்த கௌதம்மேனன் அப்போதே அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் பல விசயங்கள் செய்தார். அதனாலேயே இந்தப் பேட்டியை கௌதம் எடுக்க இளையராஜா ஒப்புக்கொண்டாராம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions