கோலாலம்பூரில் டி.இமானின் நேரடி இசை நிகழ்ச்சி

Bookmark and Share

கோலாலம்பூரில் டி.இமானின் நேரடி இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர்கள் பலரும் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக கான்செர்ட் என்ற பெயரில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல்வேறு நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்துள்ளார். இதுவரை எந்தவொரு நேரடி இசை நிகழ்ச்சியையும் நடத்தாத டி.இமான், தற்போது முதன்முறையாக ரசிகர்களுக்காக நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. வருகிற மே மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர்கள் ஹரிச்சரண், சந்தோஷ் ஹரிச்சரண், திவாகர், சுவேதா மோகன், வந்தனா சீனிவாசன், பூஜா மற்றும் டி.இமான் இசையில் பாடிய அத்தனை பின்னணி பாடகர்களும் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ‘விஜய் டிவி’ புகழ் பாவனா தொகுத்து வழங்க இருக்கிறார். 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions